வெயில்


உழவுக்கும்
தொழிலுக்கும்
உதவும் தேவதை நீ.....

தாவரம்
தழைக்க செய்யும்
தாயானவள் நீ....

பருவ மாற்றத்தை
பறைசாற்றும்
பாவை நீ.....

சூரியனின்
செல்லப் பிள்ளை....

வண்ணங்களின்
வற்றா களஞ்சியம்....

பகலின்
முகவரி....

நாளின்
முதல் வரி.....

அதி காலையில்
ஆனந்தம் அள்ளித்தரும்
அற்புதம் நீ....

மாலையில்
மனம் மயக்கும்
மங்கை நீ......

ஆயிரம் குறை
அழகே உன் மீது
ஆளுக்கொன்று கூறினாலும்
அருள் விடிவே நீ.........
அதிலொன்றும்
ஐயமில்லை.....

Comments

Unknown said…
Good thought...nice creativity :) :)