எனக்கும் அவசியப்படுகிறது...


பிடித்த புத்தகத்தில்
பத்து வரி
படிக்கும் முன்
பறந்து வருகிறது
பாடாவதி பார்வர்ட்.......

இழவு வீட்டிலும்
இங்கீதம் இன்றி
இசைக்கிறது
'இச்சு தா இச்சு தா' ரிங் டோன்....

கடலாய் இருக்கும்
குடும்பத்தில்
தனி தனி தீவுகளாய்
உறவுகளை மாற்றிவிடுகிறது
கால்களும், மிஸ்டு கால்களும்....

ஆயினும்
அவசியப்பட்டுதான் போகிறது
அலைபேசி எனக்கும்....
தனியே சென்ற மகள்
'அப்பா, வந்து சேந்துட்டேன்'
என கூறும்
தருணத்தில்.....

Comments

Muthu Saravanan said…
very nice uma......ne kalaignaruku pethiya poraka vendiyava po.............
This comment has been removed by the author.
it's really true dear