அந்த அழகிய நாட்கள்....
பச்சிளம் பருவத்தில்
பத்து பைசா
பல்பம் தின்ற நாட்கள்....
படிக்காமல் பரீட்சைஎழுத
பயந்து பள்ளியின்
பாதி வழியில் திரும்பிய நாட்கள்....
பார்த்து எழுத உதவிய
பார்வதிக்கு மாலை
பப்பர் மிட்டாய் வாங்கித் தந்த நாட்கள்....
படிக்கவோ, இல்லையோ
பள்ளி முடித்து ட்யூஷன் போக
பறந்தோடிய நாட்கள்....
பீ.டீ. பீரியட் மணியடித்ததும்
பாய்ந்தோடிப் போய்
பந்து விளையாடிய நாட்கள்....
பத்து பேர் சாப்பிட்டாலும்
பாசத்தோடு பகிர, உணவு
பத்தாமல் போகாத நாட்கள்....
பரீட்சை முடிந்து வரும்
பத்து நாள் விடுமுறைக்காக
பகலிரவாய்க் காத்திருந்த நாட்கள்.....
பார்க்கக் கூடாதென 'டூ' விட்ட போதும்
பார்த்தவுடன் சிரித்துவிடும்
பகையில்லா நாட்கள்....
படித்து முடித்த போதும்
பணம் காசு சேர்ந்த போதும்
பாவி மனம் ஏங்கும்
பசுமையான பள்ளி நாட்கள்....
Comments
It’s always pleasure to remember our childhood days especially the school days.
Good work, Keep posting like this :)
SONDHA ANUBAVAM PESUDHO :)
Last line was so true.....