மனசாட்சியின் மறுமொழி..........


யான் செய்யும்
யாதொரு காரியமும்
யாருக்கும் புரிவதில்லை....
எனவே எவருக்கும்
என்னைப் பிடிப்பதில்லை...

என் வாய் மொழியும்
எந்த உண்மையும்
எவரையும் சுடாமலில்லை.....
எனவே எவரும்
என்னை விரும்புவதில்லை....

நான் நினைக்கும்
நினைவனைத்தும்
நிஜமன்றி வேறில்லை....
எனவே எவரும்
என்னை நினைப்பதில்லை....

என் எண்ணம் சொல் செயல்
எதுவும் எனக்கானதாய்
எப்போதும் இருந்ததில்லை....
எனவே எவரும்
என்னை மதிப்பதில்லை....

என்னைப் புரிந்து,
மதித்து வாழ்பவன்
என்றும் தாழ்ந்ததுமில்லை....
தாழ்ந்துபோயின் வாழ்வதுமில்லை...

Comments

mangaimca said…
nice.i like this.