பெண்களுள் ஓரினம்........!!!
ஆணவ ஆடவனே,
அதிக அறிமுகம்
அவசியமில்லை எனக்கு....
ஆண்டவன் படைப்பில்
அன்றாடம் அவமதிக்கப்படும்
அப்பாவி நான்....
ஆம், பரத்தை தான்....!!!
ஆயிரம் பேர்
அனுதினம் வந்தாலும்
அவப்பேர் வரும் தொல்லை
அவனொருவனுக்கும் இல்லை...
ஆம், கற்பு எல்லை
ஆண்களுக்கில்லை....!!!!
மாலையிட்டவன் மணமானவன் என்றாலும்
அவன் ஒருவனுக்கு மட்டுமே வாழ்ந்தாலும்
வப்பாட்டி நான்....!!!
வாழ்வளித்தவன் வராமலே போனாலும்
வந்தவன் விதிவழி சேர்ந்தாலும்
வாழாவெட்டி நான்....!!!
மனைவி உத்தமியாய்
மாசற்ற மணிவிளக்காய்
திகழச் செய்ய - நீ
திரித்துவிட்ட கதைகள் ஆயிரம்...!!!
மன்னித்துவிடு
மனிதப்பதரே,
என்னிடம் நீ வந்து
தன்னிடம் திரும்பும் போது
உத்தமன் நீயென உரைக்க
எந்த நாய் வரும்?
உனக்கும் தான்
எப்படி வாய் வரும்?
நான் ஓரினம்
நசுங்கி அழிவதால்தான்
குலவிளக்காய் மிச்சமுள்ளனர்
குடும்பப்பெண்கள்....!!!
நீ ஓரினம்
நீண்டு வாழ்வதால்தான்
மீளாமல் மாண்டு போகிறோம்
எம்போன்ற பெண்கள்....!!!
Comments
அவன் ஒருவனுக்கு மட்டுமே வாழ்ந்தாலும்
வப்பாட்டி நான்....!!! : VERY NICE!!! Overall, well written
அவன் ஒருவனுக்கு மட்டுமே வாழ்ந்தாலும்
வப்பாட்டி நான்....!!!////
ஆணாதிக்க சமூகத்திற்கு சொல்லால் ஒரு செருப்படி
நசுங்கி அழிவதால்தான்
குலவிளக்காய் மிச்சமுள்ளனர்
குடும்பப்பெண்கள்....!!!/////
பெண் சமூகத்தின் உண்மை குரல்