மீண்டுமொரு தொடர்ச்சிப் புள்ளியில்....

வந்த பாதையெங்கும்
விரசங்கள் வரவேற்க....
பார்வையால் கூறு போடும்
பதர்கள் பல்லிளிக்க...
அலுவலகம் சேருமுன்
அரைஉயிர் போயிருக்க...
வறுமையின் கிழிசல் வழியே
காமம் தேடும்
வக்கிரம் வாழ்ந்திருக்க....
பசிக்கு ஒட்டிய வயிறிலும்
கவர்ச்சி காணும்
பாவிகள் சூழ்ந்திருக்க.....
உணவு நேரத்திலும்
உடையை ஊடுருவும்
உன்மத்தம் நிறைந்திருக்க....
தந்த வேலை முடித்து
தன் பாட்டிற்கு சென்றிருந்தும்
தன்மானம் குடிக்கும்
தாகப் பார்வை கொன்றிருக்க...
முற்றுப் புள்ளி இட
முடியா மமதையில்
தொடரும் இந்த தொல்லை
மீண்டுமொரு
தொடர்ச்சிப் புள்ளியில்....
Comments
இரக்கயிலும் நரகமா? சொர்க்கமா?
இவன்
படுகை.காம்
www.padukai.com
பெண் இனத்திற்கு
பெருமை சேர்க்கும்
உங்களின் கோபம்
அதை விட
உங்களின்
தமிழ் வார்த்தையின்
பயன்பாடுகள்
மிகவும் அருமை
தேசிய தலைவரின்
அன்பு தம்பி