தமிழே, என் உயிர் தமிழே...

ஓடிச்சென்று பிறமொழிகள் கற்கும் பித்தர்காள்
ஒருநாளும் வளங்குன்றா தமிழை புகழ்வீர்.....
நாடி வந்த மொழியெல்லாம் ஏற்றதுவாம்
நல்ல தமிழ் அழியாது நிலைக்கக் காண்பீர்...
வாடிய பயிரைக்கண்டும், வண்ண நிலவு கண்டும்
வானளாவிய காவியமீந்தது தமிழே உணர்வீர்....
கோடி கோடி ஆண்டுகள் ஓடிமுடிந்தாலும்
கன்னியாய் இன்றும் நிற்பது தமிழென்று புகல்வீர்...
தேடியலைந்து திரவியம் சேர்க்கும் பேதைமார்
தெய்வம் தந்த வரம் நம் தமிழன்றோ, புரிவீர்....
Comments
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
விமர்சன வட்டத்தை கடந்து நிற்கும்
உங்களை என்னவென்று சொல்ல
தேசிய தலைவரின்
அன்பு தம்பி
ஓவியம் பாலு
மிக அருமை உமா..... :D