சுதந்திரமான சுதந்திர தின வாழ்த்துகள்.....

வரி சங்கு முழங்க
போர் பறையரைய
வாழ்வு சாவு துணிந்தே
விடுதலை வாங்கி வந்தோம்....
ஆயிரமாயிரம் உயிரும்
அளவில்லா உதிரமும்
காணிக்கை தந்துவிட்டே
சுதந்திரம் கொண்டுவந்தோம்....
கண்ணீரும் செந்நீரும்
கலந்து ஊற்றி உழுது
உரமிட்டு உழைத்தே
உரிமை வாங்கி வந்தோம்...
கம்படியும் காலடியும்
தடியடியும் உரியடியும்
தலைமீது வாங்கியே - தாய்
நாட்டை மீட்டு வந்தோம்....
வீரமும் கோபமும்
விவேகமுடன் வேகமும்
விழலாய் உழலாது
வெற்றிக்கனி பெற்றுவிட்டோம்....
வரமாய் வாங்கிய விடுதலையும்
வருந்திப் பெற்ற சுதந்திரமும்
தேடியடைந்த வெற்றியும்
நாடி பெற்ற நாட்டையும்
கூடி விற்க பல கூட்டம்
குறிவைத்து இருக்கக்கண்டோம்....
ஓடி அவை ஒழிய
நாடி தளர்ந்து மடிய
ஒளியே எங்கும் நிறைய
ஒன்றாய் சபதமேற்போம்....
இன்றே.....
Comments
தாய் மொழியாம் தமிழில் தங்கள்...
வரைந்த தங்கள் உணர்வுகளின் படைப்பு அருமை...
un kavippulamai kandu perumitham kolkiren...thodarattum un pani..vaazhthukkal marupadiyum :)
மேருகேற்றி வருகிறீர்கள்
வாழ்க தமிழுடன்
அன்புடன்
தேசிய தலைவரின்
ஓவியம் பாலு