மனிதன் நீ.... !!!



எந்த மொழியும்
எனக்கு சொந்தமல்ல,
மௌனமே எனது மொழி...

எந்த பொருளும்
நான் காண அல்ல,
இருளே எனதுலகம்....

எந்த கீதமும்
எனக்கு ஒலியல்ல,
நிசப்தமே எனதுரிமை....

எந்த பாதையும்
என் பயணத்திற்கல்ல,
பாதமே என் பகல்கனவு....


எந்த உயிரும்
என் உறவல்ல,

எனதுள்ளமே என் உறவு....

மாறிப் போன விதியால்
மாற்று திறனாளி ஆனேன் - மனம்
மாறி எனை ஏற்றால்
 
மனிதன் நீ என்பேன்....


நவ 27 - உலக மாற்று திறனாளிகள் தினம்

Comments

singam said…
ITHUKKU PEYARTHA "KAVIDHAIY" YA...
CHUMMA.


VERY NICE.
Nithi... said…
Unga kavidhai nalla iruku
bala said…
மனிதா...
நீ மரபுக் கவிதை என்றல்
மாற்றுத் திறனாளிகள்
கடவுள் எழுதிய புதுக் கவிதை.... :)
Sri said…
nalla attempt! andha 'thai' kavidhai was v.good :)