புத்தாண்டே வருகவே....
வருகவே வருகவே....
அன்பு பொய்த்து போகாது
அகிலம் முழுதும் நிறையவே...
இன்னல் ஏதும் அணுகாது
இன்ப மழை பொழியவே...
நட்பில் விரிசல் விழாது
நன்மை மட்டும் விளையவே...
இயற்கை மனம் கோணாது
இந்த புவி குளிரவே....
எங்கும் அமைதி குறையாது
எண்ணம் நிம்மதி கொள்ளவே....
காதல் வாழ்வு முறியாது
காலம் இனிக்க செய்யவே....
மதம் இனம் பாராது
மனிதம் சிறந்து திகழவே...
பசி பிணி இல்லாது
பசுமை வந்து தவழவே....
வறுமை கொடுமை வாராது
வளமை எங்கும் பெருகவே....
வருகவே வருகவே...
புத்தாண்டே வருகவே....
புதுப்பொலிவுடன் வருகவே...
பூமி சிறக்க வருகவே....

Comments