காலம் போகிற போக்கில்........


















விதைநெல்லைக் கூட
விற்றுவிட்ட நிலையில்
"அரசு பொங்கல் பை"யால்
அரங்கேறுகிறது
விவசாயி வீட்டு பொங்கல்...

காலங்காலமாய்
கணினிக்கு வாக்கப்பட்டதால்
காஸ்ட் கட்டிங்கில்
கலை கட்டுகிறது
கணினி தொழிலாளி பொங்கல்....

ஆண்டுதோறும் வரும்
அரைகுறை பஞ்சப்படியில்
அளவாய் பொங்குகிறது
அரசாங்க ஊழியன் பொங்கல்...

மூட்டை மூட்டையாய்
அரிசியிருந்தும்
முந்திரி, வெல்லம்
எல்லாம் இருந்தும்
உண்ணாமல் வீணாகிறது
முதலாளி வர்க்க பொங்கல்...

வீடின்றி வாசலின்றி
வீதியில் இடமுமின்றி
நாதியற்று கழிகிறது
நடைபாதை மக்கள் பொங்கல்...

போகியில்லை ஏதுமில்லை
பொங்கக் கூட வழியில்லை...
காளை அடக்க வீரனில்லை
காண, கூட நேரமில்லை...
கும்மி கொட்ட குமரியில்லை
குலவை போட கிழவியில்லை...
காலம் போகிற போக்கில்
பொங்கல் என்று ஒன்றுமில்லை....

Comments

bala said…
காளை அடக்க வீரனில்லை
காண, கூட நேரமில்லை...
கும்மி கொட்ட குமரியில்லை
குலவை போட கிழவியில்லை...


super :)
SaravananR said…
சூப்பர்...பொங்கல் டிவி ஸ்பெஷல் ப்ரோக்ராம் பத்தி சொல்லிய
காலங்காலமாய்
கணினிக்கு வாக்கப்பட்டதால்
காஸ்ட் கட்டிங்கில்
கலை கட்டுகிறது
கணினி தொழிலாளி பொங்கல்....


Superb lines...
Indraya Naatin Nilaimaiyai eduthu kooriyatharku Nandri...
Soundarya said…
Bala quote pannirkra lines, sooper Uma. kalakkite.
Unknown said…
Nice...keep it up Uma
Unknown said…
Romba nalla irukuu. Neenga oru thirama salingooo apuram pudhi salingoo neenga roomba nallavangooo ennum solla pona romba romba romba nallavangoooo
neenga innum neriya neriya intha madiri nalla nalla kovithai eluthungooooooooo.. saringa nan varangooooo....
thanks Vaidegi... :)

Thanks Saravanan... :)

@Raghu: ha ha.. wlc da thambi... :)

@Sou: danks ka... :)

@Pala: sure... thanks..

@Paddy: mikka nandringo...
Nirmal Kumar said…
மனதில் ஆனந்தம் பொங்குகிறது நீண்ட நாட்கள் கழித்து நல்ல தமிழ் கவிதையை படிக்கும்பொழுது..மனதில் ஒரு ஆதங்கம் நம் வாழ்க்கை நிலை எண்ணி.....வாழ்த்துகள் தமிழ் மகளே...இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

அன்பு தமிழன்,
நிர்மல் குமார்
காலங்காலமாய்
கணினிக்கு வாக்கப்பட்டதால்
காஸ்ட் கட்டிங்கில்
கலை கட்டுகிறது
கணினி தொழிலாளி பொங்கல்....


Superb lines...
Indraya Naatin Nilaimaiyai eduthu kooriyatharku Nandri...
Unknown said…
Nice one Uma...
PongalO Pongal
jayaram said…
நிதர்சனமான உண்மையை உணர்த்திவிட்டாய்!!!வாழ்த்துக்கள்
நாணல் said…
//போகியில்லை ஏதுமில்லை
பொங்கக் கூட வழியில்லை...
காளை அடக்க வீரனில்லை
காண, கூட நேரமில்லை...
கும்மி கொட்ட குமரியில்லை
குலவை போட கிழவியில்லை...
காலம் போகிற போக்கில்
பொங்கல் என்று ஒன்றுமில்லை....//

உண்மையான விஷயம்... இப்படியேப் போச்சுன்னா, பொங்கல்னு ஒரு பண்டிகை இருந்துச்சுன்னு தான் படிக்கனும் போல... :(