பேருந்து பயணம்...




அரசமரமும்

பெயரறியா

அந்த மரமும்

ஆனந்தமாய்

கைகுலுக்கி

கன்னம் ஒட்டுகிறது....



பூமரம்

பூதூவி வரவேற்க

புத்தன் காந்தி

யாருமில்லையென

தார்ச்சாலை

மேற்சொரிகிறது...



வழியெல்லாம்

அங்காடி மயமாய்

அடிக்கொரு ATM 'ஆய்

ஆங்காங்கே கோவிலாய்

அடுத்தடுத்து துரித உணவாய்

அழகாய் களைகட்டுகிறது....



டீக்கடையில் இளசுகள்

பண்ணும் ரவுசுகள்

பார்க்க பவிசாய் இருக்கிறது....



குடிசைகள்

கதவின்றி திறந்திருக்க

அடுக்குமாடிகள்

அடைத்தே கிடக்கிறது...



பள்ளிகளும்

கல்லூரியும்

கல்விக்கு பதில்

காலத்தை

எண்ண வைக்கிறது....



காலை

பேருந்து பயணம்

சொர்கம்தான்

உக்கார

இடம் கிடைத்தால்...

Comments

bala said…
Naangal aatchikku vanthal......
Ellorukkum perunthil amara idam kudupom :)
nice uma