என்னமோ? ஏதோ?

அறம்:
~~~~~~~~
அவனன்றி அசையாது அவனியெலா மாயினும்
அவனையும் அசைத் திசைய வைப்பதெம்
அறமே யென்றறிக அறிந்தகால் - அதையே
பற்றுக பற்ற றுக்க.






பொருள்:
~~~~~~~~~~
வாழும் புகழும், வளரும் நாளும்
தாழும் நிலையும் மாளும் - தானாய்
மீளும் துயரினின்றும் மீண்டு வென்று
ஆளும் நற்பண் பொன்றே.



இன்பம்:
~~~~~~~~~
வானின் வண்ண மெல்லாம்வார்த் தெடுத்து
மீனின் விழியாளை தேனின் மொழியாளை
காணின் புற்றுகளிக்கவே வந்தனன்- நங்கை
நாணின் என்செய்குவன்  யான்?


Comments

bala said…
நங்கை நாணின் என்செய்குவன் யான்? :)

Super thangam