புரிஞ்சுக்கிற போறது என்னிக்கி?
கருக்கல்ல எந்திரிச்சு
கைநெறைய எண்ண வச்சு
தலக் குளிச்சு பூ முடிச்சு
பச்சரிசி பதமா பொடச்சு
பக்குவமா வெல்லம் ஒடச்சு
கொழையாம பொங்க வச்சு
நெய்யூத்தி இறக்கி வச்சு
மனம் பூரா பொங்க
மகிழ்ச்சி மட்டும் தங்க
கொண்டாடுன காலமெல்லாம்
மலையேறிப் போச்சு.....
குக்கர்ல அரிசி வச்சு
நாலு விசில் அடிக்க வச்சு
பொங்காமலே பொங்கல் கொண்டாடறது
புது 'டிரண்ட்' ஆகிப் போச்சு........
பொங்கலே இல்லையாம்....
போகி என்ன வேண்டிக்கெடக்கு?
பழையன கழிக்க பழைய
ஞாபகம் தான் இருக்கு.....
காணும் பொங்கல் அன்னிக்கு தான்
கழுத்து முட்ட வேல இருக்கு....
பாக்காம போனாலும், மனசு
சொந்ததுக்கு ஏங்கிக் கெடக்கு....
ஆங்கில புத்தாண்டுக்கு
அரப்பொட்டு தூக்கம் இல்லாம
ஆட்டம் போடறோம்.......
காதலர் தினத்துக்கு
கை நெறைய பரிசு தந்து
காதல் பேசுறோம்.....
அடுத்தவன் விட்டு போனத
ஆசைப்பட்டு கொண்டாடறோம்....
அட, 'நம்ம பண்டிக இது தான்' னா
ஆளக் காணோம், பேரக் காணோம்....
தமிழனுக்கு உரிய நாள் இன்னிக்கி...
அத புரிஞ்சுக்கிற போறது என்னிக்கி?
Comments
கை நெறைய பரிசு தந்து
காதல் பேசுறோம்.....
vetti velai la..