பரபரப்பு.....!


இன்று ஞாயிற்று கிழமை. அவனை சந்திக்கும் நாள்.. அவளுக்கு தான் எத்தனை மகிழ்ச்சி !! ஆறு நாள் அவள் உயிரோடு இருப்பதே இந்த ஒரு நாளுக்காக தானே. அவனை பார்க்காத நாளில் அவள் இருந்தென்ன? இறந்தென்ன? ரெண்டும் ஒன்று தான்.

அவளுள் அச்சம், கூச்சம், பாசம், நிம்மதி அனைத்தும் ஒன்று சேர்ந்து மோதி அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. காலையிலிருந்தே அவளுக்கு எதுவும் ஒடவில்லை. எந்த புடவை அணிவது? எந்த நிரத்தில்அணிந்தால்
அவனக்குப் பிடிக்கும்? என்று எண்ணி எண்ணி களித்தாள்....

மாலை ௫ மணிக்குதானே பார்க்க‌ முடியும். இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளதே..... "ஐயோ" என்றிருந்தது அவளுக்கு.... 100 பேரை அழைத்து கடிகார முள்ளை நெட்டித் தள்ளலாமா என்று கூட எண்ணி சிரித்துக்கொண்டாள்.

இதோ, இதோ, இன்னும் பத்தே நிமிடத்தில் அவனைச் சந்திக்க போகிறாள். மனதில் உருத்தெரியாத ஏதோ ஒன்று உருண்டோடி அவளை அவஸ்த்தை செய்தது. கோவிலில் குறிப்பிட்ட இடத்தில் நின்றாள்.... பரபரப்பு அடங்கவே இல்லை. அவல் அதற்குமுயற்சி செய்யவும் இல்லை.

தூரத்தில் அவன் முகம்... அவன் முகமே தான். ஒடி வந்த அவனைக் கண்டதும் உயிரே ஒரு நிமிடம் சென்று வந்தது போல் உணர்ந்தாள். எந்த ஒரு சலனமுமின்றி அவனைக் கண்டாள்.... இந்த முகத்தைப் பார்க்க தானே இத்தனை ஆர்ப்பாட்டமும்..... அவனுக்கும் தான் அவளை சந்திப்பதில் எத்தனை ஆர்வம்....! எத்தனை எத்தனை மகிழ்ச்சி...!

அவளைக் கன்டதும், "அம்மா" என்று ஒடி வந்தவனை வாரி அனைத்து மாறி மாறி முத்தமிட்டாள்.... சூரியனை காணவே தவமிருக்கும் தாமரை போல் அவள் முகம் மலர்ந்தது.... விவாகரத்தில் பணக்கார கணவனிடம் மகனை
இழந்த ஏழை தாய், வேறென்ன செய்ய முடியும், அவனை கண்டு மகிழ்ந்து கண்ணீர் விடுவது தவிர....! தாய்மைக்கும் தடையுளதோ தரணியிலே......!

Comments

100 பேரை அழைத்து கடிகார முள்ளை நெட்டித் தள்ளலாமா என்று கூட எண்ணி சிரித்துக்கொண்டாள்.

தவிப்பின் உக்கிரத்தை உணரமுடிகிறது .....
கவிதை அருமை ....ரசித்தேன் ...!!!