அன்புள்ள அப்பாவி அம்மா.....
அம்மா....
அன்புள்ள அம்மா....
அன்புள்ள அப்பாவி அம்மா.....
என் மழலை பேச்சில்
மனம் மயங்கி போகிறாய் நீ.....
என் குழந்தை தனத்தில்
குதூகலமாகி போகிறாய் நீ.....
என் பிள்ளை விளையாட்டில்
பிரமித்து போகிறாய் நீ......
என் சாதனை தருணத்தில்
சந்தோஷப்பட்டு போகிறாய் நீ.......
என் சோதனைப் பொழுதில்
சொர்கமாகிப் போகிறாய் நீ.....
நானோ....
என் திருமண வேளையில்
உன் வீடு
திரும்பாமல் போகிறேன்.....
நீயும் ஒரு நாள் இப்படி தானோ.....
Comments