அண்ணே...

பாத்த தேதி நெனவில்ல
பாத்தப்பறம் மறந்ததில்ல...
பாத்த அன்னிக்கிருந்து
பாசம் மட்டும் போகவில்ல.....
அண்ணேன்னு உன்ன சொன்னே
அப்பவே அண்ணனாகி போன...
அறிஞ்சு தான் நான் சொன்னே
அதையே நெசமாக்கிப் போன...
அப்பனாத்தா உறவு
ஆளாளுக்கு ஒன்னு இருக்கும்....
எனக்கும் ஒனக்கும் மட்டும்
என்னிக்கும் ரெண்டு இருக்கும்....
அண்ணேன்னு கூப்பிட்டா
என்னடா கண்ணம்மானு
அன்பொழுக கேப்ப....
அவசரமா ஒரு பிரச்சனனா
ஆளுக்கு மொதல்ல
ஓடிவந்து நிப்ப....
போன சென்மப் பாசமோ - விட்டு
போகாத நேசமோ
அண்ணேன்னு சொன்ன பெறகு - வாய்
மறுவார்த்த பேசுமோ?
தொப்புள் கொடி பந்தமில்ல
பங்காளி வழி சொந்தமில்ல
தோட்டந்தொரவு எதுமில்ல - நம்ம
பாசந்தவர ஒண்ணுமில்ல.....
நாலூரு நீ போனாலும்
நாந்தேன் ஒம் ஒடம்பொறப்பு....
நாளைக்கே நான் போனாலும்
கோடித்துணி உம்பொறுப்பு.....
Comments
நாந்தேன் ஒம் ஒடம்பொறப்பு....
நாளைக்கே நான் போனாலும்
கோடித்துணி உம்பொறுப்பு.....//
ரொம்ப ரசிச்ச வரிங்களுங்க. நல்லா எழுதறீங்க..
நாலூரு நீ போனாலும்
நாந்தேன் ஒம் ஒடம்பொறப்பு....
நாளைக்கே நான் போனாலும்
கோடித்துணி உம்பொறுப்பு.....
arputham po !