ஏற்பது இகழ்ச்சி....
பெரிய வூட்டு விசேஷம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்...
வாழஎல வெட்டிப்போய்
வேளா வேளைக்கு வெள்ளோட்டம்.....
தாலி கட்டிமுடிச்சா
தடபுடலா நடக்கும் விருந்து....
வந்த சாதி சனம்
வக்கணையா தின்னும் இருந்து....
வெட்டியா குப்பைல வீசினாலும்
வேதனைப்பட ஆருமில்ல....
வேணாம்னு தூக்கி போட்டத
விரும்பி தின்ன தோனல....
மிச்சம் மீதி இருந்தாலும்
எங்கள கூப்புட ஆளில்ல....
அச்சம் வெக்கம் விட்டு
அவங்கள கேக்க மனசில்ல....
நாங்க
பிச்ச எடுத்து தின்னாலும்
பச்சப்புள்ளையும் பசி பொறுக்கும்...
நீங்க
வச்சுக்கிட்டு தரலனாலும்
எச்சஎல பொருக்கமாட்டோம்...
Comments