பழகிவிட்டது எனக்கு....


பாதி ராத்திரி தூங்காமல்
பத்து மணிக்கு எழுகிறேன்.
பழகிவிட்டது எனக்கு....

பழக்க தோஷத்தில் கிளம்பி
பணிக்கு வருகிறேன்.
பதினொரு மணிக்கு....

காலை முதல்
கணினி முன்னே....
காதலி போல் முறைக்கிறேன்....
கடும் கோபத்தில் அடிக்கிறேன்....
கண் மூடி பேசுகிறேன்....
காரணமின்றி சிரிக்கிறேன்...

வேலையிருந்தால் வெறுக்கிறேன்
இல்லாவிட்டால் சலிக்கிறேன்....
ஏசியிலேயே இருக்குறேன்
வேர்வை உடம்பில் சேர்க்கிறேன்...

ஆர்குட்டில் அரட்டை அடிக்கிறேன்
ஆனந்தமாய் பஸ்ஸ் படைக்கிறேன்
பேஸ்புக்கில் நீந்தி குளிக்கிறேன்
பேசியே பொழுது கழிக்கிறேன்

இருட்டினாலும் எழ மறக்கிறேன்
இங்கிருந்து போக மறுக்கிறேன்...
எதிலும் வெறுமை உணர்கிறேன்
எப்போதும் தனிமை, தவிக்கிறேன்...

பணமீட்ட குடும்பம் பிரிந்தேன்
பாசம் நேசம் எல்லாம் துறந்தேன்
பணமே வாழ்வில்லை புரிந்தேன்
வாழ்வை வாழவே மறந்தேன்....

இன்றும் மடிந்தது
கனவும் முடிந்தது...
மீண்டும்
பாதி ராத்திரி தூங்காமல்
பத்து மணிக்கு எழுகிறேன்.
பழகிவிட்டது எனக்கு....

Comments

hey pinnita.. enaku appdiyae porunthuthu..
A typical software engineer's life...

Good. Office la velaye paakurathu illa pola. Itha unga manager paakanum.
@Raghu:
ha ha ha...
vitta neeye pottu kuduthuduva pola...
venam da thambi... ;)
Anonymous said…
very good...

however, you missed the sleep in office too :-) you made it to look like you sleep less being a s/w engineer!! the reality is otherwise ;)

asusual... a very excellent one! :-)
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
ReeR said…
கலக்குற போ ....