ஆசை....!!!!
அன்றலர்ந்த மலருடன்
அதிகாலை பொழுது கழிக்க
ஆசை....
அன்பே எங்கும் நிறைய
ஆனந்த வாழ்வு வாழ
ஆசை....
பகை கோபம் நீங்கி
பார் முழுதும் செழிக்க
ஆசை....
பாமரர் யாருமில்லை
பறையொலி கேட்க
ஆசை...
வயலும் வளமும்
வானளவு வளர
ஆசை...
வீரமும் காதலும்
வேரோடி மலர
ஆசை...
மதமும் இனமும்
மறைந்து மண்மூடிப் போக
ஆசை....
மனிதம் மட்டுமே
மண்ணில் நிலையாக நிற்க
ஆசை....
சொன்னதெல்லாம் நடக்குமென்றால்
"சொர்க்கம் இதுதான்" சொல்ல
ஆசை....
இயலாமல் போவதானால்
இப்போழ்தே உலகம் முடிய
ஆசை....
Comments
எப்போதும் என் தோழியாக இருக்க எனக்கு
ஆசை....
அருமையாக உள்ளது கண்மணி...வாழ்த்துக்கள்....