நட்புக்காக….
கண்ணீர் கரைந்த
உன் சட்டைக்கும்
புறவாய் வழிந்த
உன் கால்ச்சராய்க்குமே
தெரியும்….
நான் உன்
தோளில்
குழந்தையானதும்….
மடியில்
மழலையானதும்….
__{*_*}__
நீ
திட்டியதிலிருந்து
எனக்குப் பிடித்த மிருகம்
‘எரும’ என்றானது….
__{@_@}__
உன் ‘சொல்லு’ உம்
என் ‘அப்பறம்’ உம்
உள்ளவரை
நம் நட்புரையாடல்
தீர்வதற்கில்லை……
__{*..*}__
தாச்சுக்கவும்
தலைகோதவும்
‘மும்மா’ செய்யவும்
‘மூஞ்சி’ சொல்லவும்
‘வெவ்வெவ்வே’ திட்டவும்
வேதனை துடைக்கவும்
நட்பீந்த வரம் நீ….
__{*,,*}__
வானுக்கேது
முதலும் முடிவும்….?
நட்புக்கேது
நாளும் கிழமையும்….?
நமக்குள் ஏது
உன்னதும் என்னதும்….?
__{*=*}__
நானாய்
சாய்ந்துகொள்ள
மறந்தபோதும்
தானாய்
சாய்த்துக்கொள்ள
மறுக்காத
உன் தோள்களுக்கே
சமர்ப்பணம்
உயிருக்குயிரான
என் நட்பு….!!!
__{*~*}__
அம்மு
ம்மு
தங்க புள்ள
குட்டி செல்லம்
மா
அமுமா
உனக்கு நான்
எதுவானாலும்
எனக்கு
‘தாயுமானவன்’
நீ….!!!
__{*@*}__
‘நானிறந்தபின்பு
சுமந்து செல்லும்
நால்வரில் ஒருவனாய்
நீயிருக்க வேண்டும்’
என்பது மட்டுமே
நட்பின் பெயரால்
நானிடும் கட்டளை….
__{*$*}__
உயிரின் உயிரான,
உயிரோடு உறவான,
உயிரினும் மேலான
உயிர் தோழனுக்கு….
செல்லமு…. உனக்காக டீ….. :)

Comments
doing great work.Keep going...
தோல்வி
உயிரே நீ நாளை சாவை எதிர் கொள்வதற்காக
இன்று வாழ பழகி கொண்டாய் ...
உயிரே நீ நாளை ஜெய்ப்பதற்காக
இன்று தோல்வி கண்டு பயப்படுவது ஏனோ ?
உங்கள் கவிதை வரியில் இருந்து பிறந்த எனது எண்ணங்கள்