கேட்ட தத்துவங்கள் சில...

1.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.--லியோ டால்ஸ்டாய்
`
2.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.-- கண்ணதாசன்
`
3.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.
`
4.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.--சுகி செல்வம்
`
5.நேற்று,இன்று,நாளை ;

இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் - ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்.... ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான் -- ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.
`
6.முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்.--லேனா தமிழ்வாணன்.
`
`

Comments