கல்விய கேக்குரோங்க....
சிட்டுக்குருவி தலையில
பனங்காய பாருங்க....
சித்தெறும்பு முதுகுல
பாராங்கல்ல பாருங்க.....(சிட்டுக்குருவி)
பொண்ணுங்கெல்லாம் படிக்கணும் னு
பெரியவக சொன்னாக
சொன்னவாக சொல்லிவச்ச
சொல்ல கேக்க யாரு இங்க?
சொல்ல கேக்க யாரு இங்க?
ரெண்டெழுத்து படிச்சு புட்டா
தலையெழுத்து மாறுமுங்க
தலையெழுத்து மாறுமுன்னே
தல மேல பாரமுங்க
என்தல மேல பாரமுங்க.....(சிட்டுக்குருவி)
வீடுக்குல உலகமுன்னு
பூட்டி பூட்டி வச்சாக....
உலகமே வீடு தான்னு
எப்பதான் புரியுமுங்க...?
கண்ணு கெட்ட பின்னால
கடவுள பாப்பது போல்
பொண்ணு செத்த பின்னால
பொலம்பி என்ன ஆகுமுங்க?(சிட்டுக்குருவி)
நெனச்சத சொல்லிபுட்டேன்....
நெனச்சு பாத்துக்கங்க....
வேதனை தீர தான்
கல்விய கேக்குரோங்க....
சாதன படைக்க தான்
கல்விய கேக்குரோங்க....
நாங்க கல்விய கேக்குரோங்க....
Comments
பூட்டி பூட்டி வச்சாக....
உலகமே வீடு தான்னு
எப்பதான் புரியுமுங்க...?//
யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்பது இதுதானோ..
படிக்காத பாமர சிறுமி கூறும் மொழி என்பதால் பேச்சு தமிழில் எழுதினேன்....