அதே பார்வை ....


அன்றொரு நாள்....
சாலையோர
நடைபாதையில்
உணவின்றி உருண்ட
ஒட்டிய வயிற்று
ஒல்லி சிறுவன்....

மீண்டுமொரு நாள்....
போக்குவரத்து
நெரிசலில்
பெற்ற பிள்ளைக்கு
பால் வாங்க
கையேந்திய
கைம்பெண்....

இன்னொரு முறை....
மண்டப வாசலில்
இலை பொறுக்கும்
போராட்டத்தில்
இன்றைய
இளைய தலைமுறை....

மற்றொரு முறை....
கோவிலில்
அபிஷேகம் செய்யும்
பாலை
ஆசையாய் பார்க்கும்
அநாதை சிறுமி....

அன்றும்
இன்றும்
என்றும்
மாறவே இல்லை....
பசி
பார்த்துக்கொண்டே இருக்கிறது
அதே பட்டினி பார்வை ....

Comments

Anonymous said…
very good poem like the others :-)
Sri said…
good! nacchendra lines : அன்றும்
இன்றும்
என்றும்
மாறவே இல்லை....
பசி
பார்த்துக்கொண்டே இருக்கிறது
அதே பட்டினி பார்வை ....