மின்சாரக் கம்பிகள் மீதமரும் பறவைகள்



என்றும்
அடைக்கலமாய் நீ....

எப்போதும்
வரவேற்பாய் நீ....

மழையாலும்
வெயிலென்றாலும்
மறுக்காது
மடி தருவாய் நீ....

குருவி,
நான் வந்த போதும்,
குயில்,
கூவி வந்த போதும்,
காகம்,
களைப்பாய் வந்த போதும்,
கலப்படமற்ற
கருணை
காட்டியது நீ ...

இந்த
இருபத்திவோராம்
இயந்திர நூற்றாண்டில்
மரமேன்பதே
மரித்துப் போனதால்
வீடென்பதே
நீயாகிப் போனாய்
எங்களுக்கு....

நீ
விழும் போது
மனிதன் வீடு
இருளில் விழுகிறது ...
எங்களுக்கோ
வீடே விழுகிறது....

இருந்தும்
இன்பமாய்
இருக்கிறோம்....
இன்று இரவுக்கும்
உன் மடி இருப்பதால்....

Comments

Raja Krishnan said…
good one. different. nice. this shows, u got a good different friend :P
ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்...
Muthu said…
மிக அருமை !!