நான் தமிழன்....

வன்முறை வளரட்டும்
என் வீட்டு ஜன்னல்
உடையாத வரை….
தீவிரவாதம் ஓங்கட்டும்
என் தம்பி
அக்கூட்டம் சேராத வரை….
கற்பழிப்பு தொடரட்டும்
என் தங்கை
பாத்திக்கப்படாத வரை….
மொழி செத்துப்போகட்டும்
என் நுனி நாக்கு ஆங்கிலம்
வற்றிப்போகாத வரை...
நாடு நாசமாய் போகட்டும்
என் அமெரிக்க வீசா
முடியாத வரை….
என்ன தவம்
நான் செய்தேன்
தமிழனாய் பிறப்பெடுக்க.....
என்ன பாவம்
தமிழ் செய்ததது - என்னைத்
தமிழனாய் பெற்றெடுக்க....
Comments
இதில் தமிழும் தமிழனும் தனியாக என்ன தவறு செய்து விட்டான் கண்மணி?
செம்மொழி மாநாட்டு வாசலில் நாவினை தோரனமிட்டால் அறியமாட்டான் தமிழன் தன் பெருமையை. முடிந்தவரை சக தமிழருக்கு தாம் அறிந்த பெருமைகளை பறைசாற்ற வேண்டும். அதனை நினைத்து நினைத்து உளம் பூரிக்க வேண்டும்.
முன்னோர் வீரப் பெருமைகளை சித்திரமாய் வரைந்து பார்த்திபப் பல்லவனுக்கு வீரத்தை வளர்த்தார்களாம்.
அதை புரிந்து செயலாற்றாத வரை, பழங்கதைகள் பயனற்றவை தானே...