நான் தமிழன்....


வன்முறை வளரட்டும்
என் வீட்டு ஜன்னல்
உடையாத வரை….

தீவிரவாதம் ஓங்கட்டும்
என் தம்பி
அக்கூட்டம் சேராத வரை….

கற்பழிப்பு தொடரட்டும்
என் தங்கை
பாத்திக்கப்படாத வரை….

மொழி செத்துப்போகட்டும்
என் நுனி நாக்கு ஆங்கிலம்
வற்றிப்போகாத வரை...

நாடு நாசமாய் போகட்டும்
என் அமெரிக்க வீசா
முடியாத வரை….

என்ன தவம்
நான் செய்தேன்
தமிழனாய் பிறப்பெடுக்க.....

என்ன பாவம்
தமிழ் செய்ததது - என்னைத்
தமிழனாய் பெற்றெடுக்க....

Comments

Unknown said…
Un saadal purinthathu, thamizhan endru solvatharkey bayamai irukkirathu :)
Arunj said…
This is common fact for any normal human life around India n world..

இதில் தமிழும் தமிழனும் தனியாக என்ன தவறு செய்து விட்டான் கண்மணி?
Sateesh said…
This comment has been removed by the author.
Sateesh said…
தமிழன் தனது பெருமையை தானாய் அறிய முற்ப்பட வேண்டும்.
செம்மொழி மாநாட்டு வாசலில் நாவினை தோரனமிட்டால் அறியமாட்டான் தமிழன் தன் பெருமையை. முடிந்தவரை சக தமிழருக்கு தாம் அறிந்த பெருமைகளை பறைசாற்ற வேண்டும். அதனை நினைத்து நினைத்து உளம் பூரிக்க வேண்டும்.
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயனொன்றில்லை"
Sateesh said…
பழங்கதைகள் பேசிதான் நாகரிகத்தையும், வீரத்தையும் அது சார்ந்த பெருமைகளையும் உணர முடியும். தமிழனுக்கு முதலில் தான் யார் என்பத்தை அறிய வைக்க வேண்டும்.

முன்னோர் வீரப் பெருமைகளை சித்திரமாய் வரைந்து பார்த்திபப் பல்லவனுக்கு வீரத்தை வளர்த்தார்களாம்.
பேசக்கூடாது என்று சொல்ல வில்லை... பேசுவதால் பயனில்லை என்று கூறியவன் பாரதி...
அதை புரிந்து செயலாற்றாத வரை, பழங்கதைகள் பயனற்றவை தானே...
Anonymous said…
அருமையான கருத்துகள்