எனக்கும் தெரியல.....


குயில் கூவுறதும்
கறவ கத்துறதும்
காது குளிர கேட்டு
காலைல கண் முழிப்பேன்.....

வாய் ஓயாம
வஞ்சாலும்
வாய்க்கு ருசியா
வக்கணையா
சமைச்சு போடும் ஆத்தா.....

வட்டிக்கு பணம் கட்ட
வக்கில்லைனாலும் நான்
வேண்டியத வாங்கியாரும்
அப்புச்சி....

எலேய் னு ஒரு குரல் கொடுத்தா
எங்க இருந்தாலும்
என்னான்னு ஓடிவந்து
எனக்கு வேலை செய்யும் தம்பி....

போடி வாடி னு சண்ட போட்டாலும்
போட்டி போட்டு அடிச்சுகிட்டாலும்
பொய் சொல்லகூட மனசு வராத
பொண்ணு எந்தங்கச்சி......

படிச்சு கிழிச்சாச்சு
பட்டமும் வாங்கியாச்சு
பாரின் கம்பெனில
வேலையும் கிடைச்சாச்சு....

தல வலிச்சா சாய ஆத்தா மடி இல்ல
மருந்து வாங்க அப்புச்சி கூட இல்ல...
தைலம் தேய்க்க தம்பியும் இல்ல
தண்ணி 'இந்தா' னு குடுக்க தங்கச்சியும் இங்க இல்ல.....

உசிலம்பட்டில பொறந்து
ஊருவிட்டு வந்து
வெந்த ரொட்டியும்
வேகாத அரிசியும்
தின்னும் பொது
கண்ணு தான கலங்குதுக
கூட இருக்குறதுக
காரமானு கேக்குதுக
காரம் ஒன்னும் இல்ல
பாரம் தான் னு சொல்ல
மனசுக்கு தெம்பு இல்ல
வாய்க்கு வார்த்தை இல்ல....

காசுக்கு
வாழ்க்கைய தொலச்ச
கயரா கூட்டத்தவிட்டு
எப்போ போவேனோ
எனக்கும் தெரியல.....

Comments

உருக்கமும் உண்மையும் கலந்த கவிதை ....
Sakthi said…
எனக்கும் தெரியல
கலக்கிட்டிங்க ...... செமயா இருக்கு .....
நெஞ்சை தொட்ட கவிதை.....
இதை உங்களை பற்றி அறிந்ததால் சொல்லுகின்றேன் ...

மிகவும் அருமையான வெளிப்பாடு... சுயவேதனை வார்த்தைகளாக ..


என்னுடைய மறுமொழி ...


எனக்கு தெரியும் ....எனக்கு தெரியும் ....


வாழ்க்கையை வறுமையோடு நகர்த்த
தள்ளுவண்டி தள்ளும் அப்பா...

உச்சி வெயிலிலே...
எச்சில் வறண்ட வேளையிலும்...
முக்காடு போடாம..
கரிசல் காட்டில் கலவெட்டும் அம்மா.

சோற்று பானை கரிஎல்லாம்..
பாவடைக்கு மாற்றிக்கொண்டு..
ஆயிரம் ஒட்டையோடு...
மேலாடையும் போட்டுகொண்டு
அத்தனை வேலையும்
அடிவாங்கி... அடிவாங்கி
செய்கின்ற தங்கை...

மூத்தவனா பொறந்ததால
முதுகெல்லாம் பாரம் சுமக்கும்...
வயசோட உணர்சிகள ...
வறுமைக்கு விற்று விட்டு
எந்நாளும் உழைக்கும் எங்க அண்ணா...

கோழியை எழுப்பிவிட்டு
கூவ சொல்லிவிட்டு ...
ஓட்டை மிதிவேண்டியோடு
ஒருமணிக்கு டவுனுக்கு சென்று...
பஸ்சு பாதயை பார்த்து கிடந்தது...
கட்டபிரிச்சு எட்டு மணிக்குல்லை
உலக செய்திகளை எல்லோருக்கும்
கொடுத்துவிடும் தம்பி...

இத்தனைபேரும்
இன்பமாய் சிரிச்சாங்க ...

வெட்டவெளி பொட்டளின்
வெயில் கொபல்ல
ரணம் மறந்த அம்மா..
"மாரியாத்தா கோவிலுக்கு
கூலுத்த வேண்டிருக்கேன்
மகனே போயிட்டுவா
மாரியாத்தா உன்னுடனே "

கவலைமறந்த அப்பா
கசுதமா சொன்னாரு
"பத்திரமா போய்ட்டுவா "

தலைபாரம் சுமைக்கு
அண்ணா சொன்னான்
"ஊருக்கு போன உடனே
போன் போடு...இல்லாட்டி
ஆத்த உன்னை நினைச்சு
அழுதே செத்துடுவா"

அடுப்படி தங்கச்சி
அழுகாம வந்து நின்னு
"அண்ணன் உன்ன விட்டு
அவளவு நாள் என்னால
எப்படி இருகக முடியும்"

செய்தித்தாள் போடும் தம்பி
சீக்கிரமா ஓடிவந்து
"அண்ணே நல்ல சாப்பிடு
நானிருக்கேன் அப்போவோடு "

அத்தனை முகத்திலையும்
ஆனந்தம் கண்டேனே...

ஒத்த பட்டத்தோடு
உயரபறக்கும் பிளேனின் டிக்கட்டோடு
வெளிநாடு வேலைக்கு
ஏக்கத்தோடு போகும் பொது
அத்தனை முகத்துலையும்
ஆனந்தத்தை நான்கண்டேன்...

மொத மாச சம்பளந்தான்
முருகனுக்கு வச்ச்ச்புட்டு
ஆத்தா சொன்ன
அப்பா முருகா
ஆண்டவன்தான் என்புள்ளை ...
manimozhi said…
அருமை கண்மணி .....

மிக அருமை தமிழ்...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க....மனசை என்னமோ பண்ணுது....